இயக்குநர் வினோத் இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடிக்கும் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித்குமார் காயமடைந்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் சண்டைக்காட்சியில் நடித்த போதே அஜித் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்களில் துரத்திச் செல்லும் காட்சியில் நடித்தபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததால் காயமேற்பட்டுள்ளது.
தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கும் வலிமை திரைப்படத்தின் சென்னை படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கும் எனவும் அதுவரை அஜித் ஓய்வில் இருப்பார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.